இவன்தான் கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய காவி தீவிரவாதி துடியலூர், ஜூலை. 25–
கோவை துடியலூர் அருகே உள்ள வழிபாட்டுதலம் மீது கடந்த 22–ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
ஆனால் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்க துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜன், தண்டபாணி. ஏட்டுகள் பார்த்தீபன், வெங்கடாசலம் மற்றும் போலீசார் இரவு பகலாக தேடிவந்தனர்.
அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்பது தெரியவந்தது.
மதியழகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்து முன்னணி முன்னாள் தலைவர் என்பதும் தெரியவந்தது.
பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்கவே நானும், இன்னொருவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டை வழிபாட்டு தலத்தின் மீது வீசினோம் என்றார்.
சமுதாய உரிமை
ஓமாம்....முஸ்லீம்கள் அத்தனைபேரும் அப்பாவிங்க.......
ReplyDelete