Saturday, 29 December 2012

பதினாறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா காரணம் - வாக்குமூலம்



இந்தியாவில் இதுவரை சம்பவித்த குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை ஹிந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. 
மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ஒருவர் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
.2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டார். இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன
ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்குமூலங்களின் வழியாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக்கிழமை  தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனைஇடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது.தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது.
மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிடம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா?என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் ஹிந்துத்துவத்திற்க்கு தொடர்பிருப்பதையும் ராஜேந்தர் செளத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.

Tuesday, 25 December 2012

பாஜக. எம்.எல்.ஏ. மகன்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 முஸ்லிம்கள் கவலைக்கிடம்!


                                               
DEC6, பீகாரின் "கோபால்கஞ்" மாவட்டத்தின் "நவ்நியாலி"யில் ராம் பர்வேஷ் எம்.எல்.ஏ.,வின் மகன்கள், கண்மூடித்தனமாக சுட்டதில் 7 முஸ்லிம்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இது பற்றி "டிவிஷனல் போலீஸ் உயரதிகாரி, நிர்மலா குமாரி" கூறியதாவது:
நவ்நியாலி டோலா ஊரை சேர்ந்த கப்பார் அன்சாரி என்பவர், தனது இடத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்ததை பிரச்சினையாக்கி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வின் மகன்கள், ராகேஷ் ராம் மற்றும் பப்பு ராய் ஆகியோர், மற்றும் சிலருடன் நேற்று நள்ளிரவில் கப்பார் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், கப்பார் அன்சாரி, நஜ்முன்னிசா, ஜப்பார் அன்சாரி, தாரா காத்தூன், தன்னு அன்சாரி, நதீம் ரஸா, மற்றும் ஷமீம் அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துமனையான "சத்தர் ஹாஸ்பிட்டலில்" சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
துப்பாக்கி குண்டுகள் உடலின் பல பாகங்களையும் துளைத்துள்ளதால், அனைவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதையடுத்து "கோரக்பூரின் மருத்துக்கல்லூரி"க்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான ராம் பர்வேஷ் கூறுகையில்:
இந்த இடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, தேவை இல்லாமல் பஞ்சாயத்து செய்ய சென்ற, எனது பிள்ளைகள் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர்,என்றார்.
காயமடைந்து உயிருக்கு போராடி வரும், கப்பார் அன்சாரியின் வாக்குமூலத்தையடுத்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.வின் இரு மகன்கள், ரஞ்சன் யாதவ், ஹரேந்தர் சிங், ராஜு, நாகேந்தர் சிங் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் உட்பட 45 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
SOURCE:MARUPPU.IN

பாஜக. எம்.எல்.ஏ. மகன்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 முஸ்லிம்கள் கவலைக்கிடம்!


                                               
DEC6, பீகாரின் "கோபால்கஞ்" மாவட்டத்தின் "நவ்நியாலி"யில் ராம் பர்வேஷ் எம்.எல்.ஏ.,வின் மகன்கள், கண்மூடித்தனமாக சுட்டதில் 7 முஸ்லிம்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இது பற்றி "டிவிஷனல் போலீஸ் உயரதிகாரி, நிர்மலா குமாரி" கூறியதாவது:
நவ்நியாலி டோலா ஊரை சேர்ந்த கப்பார் அன்சாரி என்பவர், தனது இடத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்ததை பிரச்சினையாக்கி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வின் மகன்கள், ராகேஷ் ராம் மற்றும் பப்பு ராய் ஆகியோர், மற்றும் சிலருடன் நேற்று நள்ளிரவில் கப்பார் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், கப்பார் அன்சாரி, நஜ்முன்னிசா, ஜப்பார் அன்சாரி, தாரா காத்தூன், தன்னு அன்சாரி, நதீம் ரஸா, மற்றும் ஷமீம் அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துமனையான "சத்தர் ஹாஸ்பிட்டலில்" சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
துப்பாக்கி குண்டுகள் உடலின் பல பாகங்களையும் துளைத்துள்ளதால், அனைவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதையடுத்து "கோரக்பூரின் மருத்துக்கல்லூரி"க்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான ராம் பர்வேஷ் கூறுகையில்:
இந்த இடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, தேவை இல்லாமல் பஞ்சாயத்து செய்ய சென்ற, எனது பிள்ளைகள் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர்,என்றார்.
காயமடைந்து உயிருக்கு போராடி வரும், கப்பார் அன்சாரியின் வாக்குமூலத்தையடுத்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.வின் இரு மகன்கள், ரஞ்சன் யாதவ், ஹரேந்தர் சிங், ராஜு, நாகேந்தர் சிங் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் உட்பட 45 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
SOURCE:MARUPPU.IN

மோடி ஒரு மாயத்தோற்றம் - மார்க்கண்டேய கட்ஜு




குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் 

முதல்வராகியுள்ள நிலையில், இந்திய ஊடகக் குழுமத் தலைவரும், 

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ மோடி 

பற்றிய சில கருத்துரைகளையும், பரப்புரைகளையும் கேள்விக்கு 

ஆளாக்கியுள்ளார். 



தனது ஆக்கமொன்றில் கட்ஜூ கூறுகையில் மோடி பற்றி 

கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், என் 

கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிபலித்துவிடக்கூடாது 

என்பதால் தவிர்த்துவந்தேன். ஆனால் குஜராத் தேர்தல் முடிவுகள் 

அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது என் கருத்தைச் சொல்லலாம் 

என்று கருதுகிறேன்,

எந்த ஒரு அமைப்பையும் அரசையும் உரசிப்பார்க்க அதிலுள்ள மக்களின் 


வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். 

சந்தேகமில்லாமல் மோடி தன் தலைமையின் கீழ் குஜராத் ஒளிர்கிறது 

என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா விட்டிருக்கிறார். 

ஆனால் பளிச்சிடும் யதார்த்தம் வேறுவிதமாக உள்ளது

2002 ஆம் ஆண்டு சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை 

செய்யப்பட்டதை குறிப்பிடாவிட்டாலும், வேறு சிலவற்றைக் 

குறிப்பிட்டாக வேண்டும்,


குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் தேசிய சராசரியைக் 


காட்டிலும் குஜராத்தில் மிகவும் அதிக அளவில் இருக்கிறது. அங்கே 

48%சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுறுகின்றனர். 

பஞ்சமும் பட்டினியும் தாக்கியுள்ள சோமாலியா, எத்தியோப்பியா 

போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கூட 33% சத குழந்தைகளே 

ஊட்டச்சத்தின்றி துன்பப்படுகின்றார்கள். ஆனால் குஜராத்தில் இது 48% 

என்றால்... எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அந்தக் 

குழந்தைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். இது பற்றி 

மோடியிடம் கேட்டபோது அவர் எப்படியெல்லாம் மழுப்பினார் 

தெரியுமா? குஜராத் பெண்கள் குண்டாகிவிடும் பயத்தினால் பால் 

அருந்துவதில்லை; ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை, மக்களில் 

பெரும்பாலோனோர் சைவ உண்ணிகள் என்றெல்லாம் அபத்தக் 

காரணங்களைத் தான் அடுக்கினார்.

குஜராத்தில் தொழிற்சாலைகளும், சாலைகளும் மின்சார வசதிகளும் 


பெருகட்டும் ஆனால் பச்சிளம் குழந்தைகளால் அதையா அருந்த 

முடியும்? சிசு இறப்பு விகிதம் 1000க்கு 48 என்ற விகிதத்தில் 

குஜராத்திலுள்ளது. இந்தியாவிலேயே 10 ஆவது மோசமான நிலை 

குஜராத்தில் நிலவுகிறது. குஜராத் ஆண்களில் மூன்றில் ஒரு 

பங்கினருக்கு உடல்நிறை குறியீட்டெண்18.5 க்கும் குறைவாகவே 

உள்ளது. இதுமிகவும் மோசமான நிலையாகும். பிரசவ நேர இறப்புகளும் 

குஜராத்தே முன்னிலை வகிக்கிறது.

கல்வி, சுகாதாரம், வருமானம் போன்றவற்றில் எட்டு மாநிலங்களுக்கு 


அடுத்த இடத்தில் தான் குஜராத் வருகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தில் 

வறுமை 51 சதவீதம் உள்ளது. அதில் பழங்குடியினர் 57%, 

தாழ்த்தப்பட்டவர்கள் 49% , மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் 42% 

வறுமையில் வாடுகிறார்கள்.


நிலமும், மின்சாரமும், சாலைவசதிகளும் பெரிய தொழிலகங்களுக்கு 

மோடி வாரிவழங்குவது உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்க்கைத் 

தரம் எப்படியிருக்கிறது என்பதையல்லவா நாம் கவனிக்கவேண்டும்? " 

என்று கேள்வி எழுப்பியுள்ள கட்ஜூ "குஜராத் மக்கள் என்றேனும் 

ஒருநாள் விழித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் 

கூறியிருக்கிறார்.

thanks to inneram and marmayogie

Thursday, 20 December 2012

ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றுவோம் : பிரவீன் தொகாடியா பகிரங்க மிரட்டல்!


                                    
DEC12, முஸ்லிம்களே... சார்மினாரில் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றுவோம் என விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா" பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சார்மினாரில் "பாக்கியலக்ஷ்மி" கோவில் கட்டவேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உரிமைப்பிரச்சினை என்றார்,தொகாடியா.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா,
பாக்கியலக்ஷ்மி கோவிலை கட்டவிட மறுத்தால் - தரிசனத்தை தடுத்தால், லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி "அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது போல் ஹைதராபாத்திலும் மாபெரும் பாக்கியலக்ஷ்மி கோவில்" திட்டத்துடன் லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி களமிறங்குவோம்.
முஸ்லிம்களுக்கு பயந்து, கோவில் தரிசனத்துக்கு போலீஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறிய பிரவீன் தொகாடியா, ஹைதராபாத்தின் "சார்மினாரை பாக்கிய லக்ஷ்மி கோவிலாக மாற்றுவது ஹிந்துக்களின் மானப்பிரச்சினை" என்றார்.
முஸ்லிம்களே... நன்றாக காதுகளை தாழ்த்தி கேட்டுக்கொள்ளுங்கள், பாக்கியலட்சுமி ஆலயம் என்பது ஹிந்துக்களின் லட்சியம்.
தடுக்க நினைத்தால் "சார்மினார் தவிடு பொடியாவதுடன் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் " என்று ஆணவத்துடன் கொக்கரித்தார்,பிரவீன் தொகாடியா.

மாலேகானில் குண்டுவைத்த பெண் தீவிரவாதியை ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், உமாபாரதி!


                           
DEC16, மாலேகான் குண்டுவெடிப்பு "குற்றவாளி" பெண் சாமியாரிணி "பிரக்யா சிங்" டாகூரை நேற்று ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், பா.ஜ.க.வின் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர், உமாபாரதி.
குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி வரும் "காவி பயங்கரவாதிகளுக்கு" பா.ஜ.க.வின் பேராதரவு உண்டு என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பதில் "உளவுத்துறையின் உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு.
இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு" வெளிப்பட்டு, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் "கம்பி" எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
கைதாகி சிறை செல்பவர்களின் குடும்பங்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் பா.ஜ.க.வினர் நிறைவேற்றி வருவதுடன், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை.
இதுவரை வெளியிலிருந்து தீவிரவாதிகளை ஆதரித்து வந்த பா.ஜ.க., தற்போது நேரடியாக களத்தில் இறங்கி, காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவும் - அவர்களை காப்பாற்றவும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.
அதன் வெளிப்பாடு தான், மாலேகானில் குண்டுவைத்த "பெண் சாமியாரிணி பிரக்யா சிங் டாகூரை" போபாலில் உள்ள சென்ட்ரல் ஜெயிலுக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார், பா.ஜ.க.வின் உமாபாரதி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட  பிரக்யா சிங், பலமுறை ஜாமீன் கேட்டும்,  நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது, குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல்!


DEC16, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த வழக்கில், ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த "தலைமறைவு தீவிரவாதி" ராஜேந்தர்  சௌத்ரி, உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில், ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜேந்தர் சௌத்ரி, நேற்று முன்தினம் (15/12) மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள நாக்தா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டான்.
தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த "ராஜேந்தர் சௌத்ரி" தனது பெயரை "சமந்தர் சிங்" என்று மாற்றிக்கொண்டான்.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, தேவேந்தர் சிங் ஆகிய மூவர் ஜெயிலில் உள்ள நிலையில், ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
தற்போது, ராஜேந்தர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், "மக்கா மசூதியிலும்" குண்டு வைத்ததாக கூறுகிறான்.
2007 பிப்ரவரி 18,ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி, மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ராஜேந்தர் என்ற சமந்தர் சிங்கிடம் நடத்தப்பட்டுவரும் விசாரணையில், மேலும் பல முக்கியத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர், NIA (National Investigation Agency) அதிகாரிகள்.
source:maruppu.in

மத்திய பிரதேச அரசு "காவி" பயங்கரவாதிகளுக்கு "புகலிடம்" தருகிறது


ஆளும் பாஜக அரசு "குண்டுவெடிப்பு" குற்றவாளிகளை பாதுகாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான, திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் - பாதுகாப்பு வழங்குவதும், சட்டப்படி குற்றம் என்றார் அவர்.
நேற்று முன்தினம் இரவு, உஜ்ஜைனை அடுத்த "நாக்தா"வில் வைத்து "காவி பயங்கரவாதி" ராஜேந்தர் சௌத்ரி கைது செய்யப்பட்டுள்ளதால், பா.ஜ.க. அரசு அவர்களை பாதுகாப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்கிறார், திக்விஜய் சிங்.
ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளியை மத்திய போலீஸ் படையினரால் பிடிக்க முடியும்போது, மாநில அரசால் ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை? எனக்கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், குற்றவாளிகளை பாதுகாத்த மாநில போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேடப்படும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோரும், மத்திய பிரதேசத்தில் தான் ஒளிந்துக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற முழு விவரங்களும், மத்திய பிரதேச போலீசுக்கு நன்கு தெரியும் என்று அடித்துக்கூறும் திக் விஜய் சிங், பயங்கரவாதிகளுக்கு மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, ஆதரவளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்திய தேசத்தில், ஒரு புறம் "காவி பயங்கரவாதம்" மறுபுறம் முஸ்லிம்களை மூர்ச்சையாக்கும் "அரச பயங்கரவாதம்" இவர்களுக்கு மத்தியில் கையாலாகாத காங்கிரஸ்.
விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம்கள், வீடுகளில் முடங்கி விடப்போகிறார்களா? வீறுகொண்டு எழுந்து நாட்டை மீட்கப்போகிறார்களா?
இது தான்  நாளைய உலகம் காணவிருக்கும் சரித்திரம்.
source:http://www.maruppu.in