DEC12, முஸ்லிம்களே... சார்மினாரில் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், ஹைதராபாத்தை "அயோத்தி"யாக மாற்றுவோம் என விசுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா" பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சார்மினாரில் "பாக்கியலக்ஷ்மி" கோவில் கட்டவேண்டும் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உரிமைப்பிரச்சினை என்றார்,தொகாடியா.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா,
பாக்கியலக்ஷ்மி கோவிலை கட்டவிட மறுத்தால் - தரிசனத்தை தடுத்தால், லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி "அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது போல் ஹைதராபாத்திலும் மாபெரும் பாக்கியலக்ஷ்மி கோவில்" திட்டத்துடன் லட்சக்கணக்கான ஹிந்துக்களை திரட்டி களமிறங்குவோம்.
முஸ்லிம்களுக்கு பயந்து, கோவில் தரிசனத்துக்கு போலீஸ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறிய பிரவீன் தொகாடியா, ஹைதராபாத்தின் "சார்மினாரை பாக்கிய லக்ஷ்மி கோவிலாக மாற்றுவது ஹிந்துக்களின் மானப்பிரச்சினை" என்றார்.
முஸ்லிம்களே... நன்றாக காதுகளை தாழ்த்தி கேட்டுக்கொள்ளுங்கள், பாக்கியலட்சுமி ஆலயம் என்பது ஹிந்துக்களின் லட்சியம்.
தடுக்க நினைத்தால் "சார்மினார் தவிடு பொடியாவதுடன் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் " என்று ஆணவத்துடன் கொக்கரித்தார்,பிரவீன் தொகாடியா.
No comments:
Post a Comment