Tuesday, 25 December 2012

பாஜக. எம்.எல்.ஏ. மகன்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 முஸ்லிம்கள் கவலைக்கிடம்!


                                               
DEC6, பீகாரின் "கோபால்கஞ்" மாவட்டத்தின் "நவ்நியாலி"யில் ராம் பர்வேஷ் எம்.எல்.ஏ.,வின் மகன்கள், கண்மூடித்தனமாக சுட்டதில் 7 முஸ்லிம்கள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இது பற்றி "டிவிஷனல் போலீஸ் உயரதிகாரி, நிர்மலா குமாரி" கூறியதாவது:
நவ்நியாலி டோலா ஊரை சேர்ந்த கப்பார் அன்சாரி என்பவர், தனது இடத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்ததை பிரச்சினையாக்கி, பா.ஜ.க. எம்.எல்.ஏ.,வின் மகன்கள், ராகேஷ் ராம் மற்றும் பப்பு ராய் ஆகியோர், மற்றும் சிலருடன் நேற்று நள்ளிரவில் கப்பார் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், கப்பார் அன்சாரி, நஜ்முன்னிசா, ஜப்பார் அன்சாரி, தாரா காத்தூன், தன்னு அன்சாரி, நதீம் ரஸா, மற்றும் ஷமீம் அன்சாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துமனையான "சத்தர் ஹாஸ்பிட்டலில்" சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
துப்பாக்கி குண்டுகள் உடலின் பல பாகங்களையும் துளைத்துள்ளதால், அனைவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதையடுத்து "கோரக்பூரின் மருத்துக்கல்லூரி"க்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து, பாஜக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான ராம் பர்வேஷ் கூறுகையில்:
இந்த இடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, தேவை இல்லாமல் பஞ்சாயத்து செய்ய சென்ற, எனது பிள்ளைகள் இதில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர்,என்றார்.
காயமடைந்து உயிருக்கு போராடி வரும், கப்பார் அன்சாரியின் வாக்குமூலத்தையடுத்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.வின் இரு மகன்கள், ரஞ்சன் யாதவ், ஹரேந்தர் சிங், ராஜு, நாகேந்தர் சிங் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் உட்பட 45 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
SOURCE:MARUPPU.IN

No comments:

Post a Comment